Saturday, February 23, 2008
Thursday, February 14, 2008
திருவல்லிக்கேணி கருட சேவை
இத்தலத்தில் பெருமாள் வேங்கட கிருஷ்ணர், தெள்ளிய சிங்கர், கஜேந்திர வரதர், அரங்க நாதர், சக்கரவர்த்தித்திருமகன் என்று ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார். ஐந்து பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ”
சித்திரையில் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பிரம்மோற்சவம்.
வைகாசையில் ஸ்ரீ கஜேந்திர வரதர் பிரம்மோற்சவம்.
தெள்ளிய சிங்கர் கருட வாகன சேவை (Close up)
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை தங்க கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. காலை 5:30 மணியளவில் கோபுர தரிசனம் சிறப்பு , பின் பெரிய மாடவீதியுலா வருகின்றார் பெருமாள். மண்டகப்படி நடைபெறுகின்றது பெருமாளுக்கு, பட்டுப் பீதாம்பரங்கள் வந்து மலையாக குவிகின்றன.
ஆனி பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம்.
மாசி மகத்தன்று அதிகாலை சமுத்திரக் கரைக்கு கருட வாகனத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார். இவ்வருடம் 21-02-08 அன்று மாசி மகம், பெருமாள் அருள் இருந்தால் அவரின் தீர்த்தவாரி கருட சேவையை அன்பர்களுக்கு அளிக்க முயற்சி செய்கின்றேன்.
Monday, February 4, 2008
திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4
அங்கையால் அடி மூன்று நீரேற்று அயன் அலர் கொடு தொழுதேத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய திருவண்புருடோத்தமத்து புருடோத்தமர் செங்கோல் தாங்கி செழுமையாக வந்தார் அன்ன நடையிட்டு.
ஹம்ச வாகனத்தில் குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார்.
திருமணிக்கூட வரதராஜப் பெருமாள் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்
திருஅரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தர்
திருதெற்றியம்பலம் பள்ளி கொண்ட பெருமாள்
திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள்
திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள்
திருமங்கையாழ்வாரின் முக அழகு
கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன்.
என்ற பாசுரசாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது.
* * * * * *
திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3
கருட சேவைக்கு குமுதவல்லி நாச்சியாருடன் புறப்படும் திருமங்கையாழ்வார்
மஞ்சள் குளியலின் போது திருமங்கை ஆழ்வார் சிந்தனைக்கினியானுடன்
மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வார் திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை, "மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே" என்று மங்களாசாசனம் செய்கின்றார் அருள்மாரி.
திருமணிமாடக்கோவிலில் ஆழ்வார் ஆஸ்தானம்
திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:
1. திருமணி மாடக் கோவில்:
2.திருவைகுந்த விண்ணகரம் :
3.திரு அரிமேய விண்ணகரம் :
4.திருத் தேவனார் தொகை :
9.திருக்காவளம்பாடி :
11. திருப்பார்த்தன் பள்ளி :
இவ்வாறு பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும், திருமங்கையாழ்வரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகின்றது. அந்த தெய்வீக அனுபவத்தை தாங்களும் பெற தங்களை என்னுடன் வருமாறு தங்களை அழைக்கின்றேன். " பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது. அடுத்த பதிவில் அந்த தெய்வீக அனுபவத்தை பெருமாள் கொடுத்த சேவையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிருக்கான விடை அடுத்த பதிவில்.
திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1
இந்த திவ்ய தேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய கருதப்படும் மூன்று சுலோகங்களும் எம்பெருமானாலேயே இத்திவ்ய தேசங்களில் உபதேசிக்கப்பட்டன.
முதலாவதான " ஒம் நமோ நாராயணா "
என்னும் நலம் தரும் அஷ்டாத்திர மந்திரத்தை ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு திருமணி மாடக் கோவில் நாராயணப் பெருமாளால் உபதேசிக்கப்பட்டது.
" ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிரபத்தயே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ "
என்ற த்வைய மந்திரத்தை ஸ்வேத ராஜனுக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் உபதேசித்தார்.
கீதையிலே
" ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோமோட்ச யிஷ்யாமி மாசுச "
என்னையே தஞ்சம் சரணமடைந்து விடு நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்து மோட்சத்தை அளிப்பேன் என்று கீதோபதேசத்தின் போது கூறிய சரம சுலோகத்தை பார்த்தன்பள்ளியிலே கண்ணன் அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்தார்.
இந்த திவ்ய தேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது. பாலச வனத்தில் வடக்கே மண்ணியாற்றையும், தெற்கே திருவரங்கக் காவிரியாற்றையும் கிழக்கே பூம்புகார் கடலையும், மேற்கே தரங்கம்பாடியையும் எல்லையாகக் கொண்ட இந்த நாகபுரி ஷேத்ரம் என்னும் திருநாங்கூரைச் சுற்றிய இந்தப் பகுதி மட்டும் பிரளய காலத்தும் அழியாமல் இருந்தது.
இந்த நாங்கூரைச் சுற்றி ஏகாதச சைவ மற்றும் வைணவ திருத்தலங்கள் இருப்பதற்கான மற்றொரு ஐதீகமானது, ஒரு சமயம் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்ததால் அவரை பிரமஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தைப் போக்க சிவ பெருமான் ஏகாதச ருத்ர அவதாரங்கள் எடுத்து ஏகாதச ருத்ர அசுவமேத யாகம் செய்தார், யாகத்தின் இறுதியில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சேவை சாதித்து சிவபெருமானுக்கு அபய பிரதானம் அளித்து சாபம் நீங்க அருள் செய்தார். இந்த திவ்ய தேசங்களில் வந்து வணங்குவோர்களுக்கும் அதே போல கருணை புரிய வேண்டும் என்ற சிவ பெருமானின் வேண்டுகோளுக்கிணங்கி ஏகாதச திவ்ய தேசங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில் கொண்டருளினார் பெருமாள். சிவ பெருமானும் எகாதச தலங்களில் கோவில் கொண்டருளினார்.
புதிர் கேள்வி:
ஆழ்வார் அருகே அவர் ஆராதித்த பெருமாள் உள்ளதை படத்தில் காணலாம். அவர் பெயர் என்ன?
விடையை அடுத்த பதிவில் காணலாம் .
Sunday, February 3, 2008
கருட சேவை - 6
சிறிய திருவடியில் மலையப்ப சுவாமி
திருமழிசைப் பிரானின் ஒரு பாசுரம்
புள்ளதாகிவேதநான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின்வாய்ப்பிளந்து புட்கொடிப்பிடித்தபின்னரும்
புள்ளையூர்தியாதலால் அதென்கொல்? மின்கொள்நேமியாய்!
புள்ளின்மெய்ப்பகைக் கடல்கிடத்தல் காதலித்தே.
புள் என்றால் பறவை அதை திருமழிசைபிரான் எவ்வாறு எடுத்து ஆண்டிருக்கின்றார் பாருங்களேன்.
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் - அன்னமாகி நான்கு வேதங்களும் ஓதிய பெருமாளே.
புள்ளின் வாய்ப் பிளந்து - கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்த பெருமாளே.
புட்கொடி பிடித்த - கருடக் கொடியைக் கொண்ட பெருமாளே.
புள்ளையூர்தியாதலால் - வேத சொரூபியான கருடனில் உலா வரும் பெருமாளே.
புள்ளின்மெய்ப்பகை - கருடனின் பகைவனான பாம்பணையில் பாற்கடலில் மாய்த்துயில் கொண்ட பெருமாளே.
08-02-02 அன்று திருநாங்கூரிலே 11 ( ஏகாதச) கருட சேவை எனவே அடுத்த பதிவிலிருந்து திருநாங்கூர் கருட சேவை பற்றிய பதிவுகள் வந்து சேவியுங்கள். திருவேங்கடமுடையானின் திருப்பள்ளியெழுச்சியை பொருளுடன் படிக்க சொடுக்குக